திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (08:14 IST)

டி.என்.பி.எல் கிரிக்கெட்: சேப்பாக்கத்தை வீழ்த்தியது மதுரை

கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நெல்லையில் மதுரை மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. இந்த போட்டியில் மதுரை அணி, சேப்பாக்கம் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
 
டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் மதுரை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் சந்திரன் மற்றும் கெளசிக் தலா 37 ரன்களும், நிலேஷ் 31 ரன்களும் எடுத்தனர். சேப்பாக்கம் அணியின் அஸ்வின் மற்றும் அலெக்சாண்டர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்
 
இந்த நிலையில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக்கம் அணி, குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து கொண்டே வந்தது. இறுதியில் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணியின் கார்த்திக் 28 ரன்களும், ஸ்ரீதர் ராஜு 24 ரன்களும் எடுத்தனர். மதுரை அணியின் வருண் மற்றும் ஷா தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஷா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
 
இந்த வெற்றியை அடுத்து மதுரை அணி 2 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் திருச்சி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.