1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (08:46 IST)

வெற்றிக்கு பின் சிஎஸ்கே வீர்ர்களின் கெத்தான டுவீட்டுக்கள்

ஐபிஎல் போட்டி ஆரம்பமாகிவிட்டாலே சிஎஸ்கே வீரர்களின் டுவீட்டுக்கள் மாஸாக இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் தமிழில், சினிமா பாணியில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருவது பெரும் வரவேற்பை பெறும்
 
இந்த நிலையில் நேற்றைய சிஎஸ்கேவின் வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங், ரஜினியின் 'சிவாஜி' பட பாணியிலும் இம்ரான் தாஹிர், ரஜினியின் 'பேட்ட பட பாணியிலும் டுவீட்டை பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு டுவீட்டுக்களுக்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
 
ஹர்பஜன்சிங் டுவீட்டில், 'ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருப்பேன்னு நெனச்சியா. பஜ்ஜி டா போய் பழைய ஐபிஎல் ரெகார்ட்ட எடுத்து பாரு. பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ். என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! ரோல்லிங் சார்! தந்தானி நானே தானி தந்தானோ என்று பதிவு செய்துள்ளார்.
 
இம்ரான் தாஹிர் தனது டுவீட்டில், 'நீ திரும்பவும் எங்கள தொட்டு இருக்க கூடாது. தொட்டுட்ட. தொட்டவன நாங்க விட்டது இல்ல. தப்பு பண்ணிட்ட சிங்காரம். முதல் அடி எப்பவும் இந்த பேட்டயோட அடி தான்' என்று பேட்ட பாணியில் பதிவு செய்துள்ளார்.
 
முதல் நாளிலேயே இருவரும் டுவிட்டரில் கலக்கி வரும் நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் இருவரது டுவீட்டுகளும் செமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது