1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2023 (09:41 IST)

9 பந்துகளில் அரை சதம்; யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த தீபேந்திர சிங்!

Dipendra singh
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் அதிவேகமாக அரைசதம் வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார் நேபாள வீரர் தீபேந்திர சிங்.



ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடந்து வரும் நிலையில் அதில் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது. அதுபோல ஆடவர் கிரிக்கெட் போட்டிகளும் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் நேபாள அணி மங்லோலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நேபாள அணி வீரர் தீபேந்திர சிங் வெறும் ஒன்பதே பந்துகளில் விரைவாக ஒரு அரைசதத்தை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார். இதுநாள் வரை 12 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் வீழ்த்திய யுவராஜ் சிங்கின் சாதனையை தீபேந்திர சிங் இன்று முறியடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டு போட்டிகளின் டி20 போட்டிகளில் 300 ரன்கள் ஈட்டி அதிகமான ரன்களை குவித்த முதல் அணி என்ற சாதனையையும் நேபாள அணி படைத்துள்ளது. நேபாள அணி வீரர் குஷால் மல்லா 34 பந்துகளில் சதத்தை வீழ்த்தி டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Edit by Prasanth.K