சிறந்த வீரர்களை அரைமணி நேர தேர்வு எப்படி தீர்மானிக்கும்? முன்னாள் பயிற்சியாளர் கேள்வி

Sandeep Patil
Last Updated: செவ்வாய், 19 ஜூன் 2018 (18:59 IST)
வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரரை யோ-யோ தேர்வு மூலம் அரை மணி நேரத்தில் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம் என்று கென்யா நாட்டின் முன்னாள் பயிற்சியாளர் சந்தீப் பட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
சர்வேத போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் யோ யோ தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா வெகு நாட்களாக போராடி தோல்வி அடைந்து வந்தனர்.
 
அண்மையில் சுரேஷ் ரெய்னா யோ யோ டெஸ்டில் வெற்றி பெற்று இந்திய அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள தொடருக்கு இந்திய ஒருநாள் அணியில் அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படார்.
 
அம்பதி ராயுடு நடந்து முடிந்த ஐபிஎல் 2018 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து அம்பதி ராயுடு இந்திய அணியில் இடம்பெற்றார்.
 
ஆனால் யோ யோ தேர்வில் அம்பதி ராயுடு தோல்வி அடைந்ததால் இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதனால் இந்த வாய்ப்பு சுரேஷ் ரெய்னாவுக்கு சென்றது.
 
இந்நிலையில் இந்த யோ யோ தேர்வு குறித்து இந்திய ஆணியின் முன்னாள் வீரரும், கென்யா அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சப்தீப் பட்டில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறயதாவது:-
 
டெஸ்ட் கிரிக்கெட் போல வீரர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அமபதி ராயுடு யோ யோ தேர்வில் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். உள்ளூர் போட்டிகளில் வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரர்களை, அரை மணி நேரம் தேர்வு மூலம் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :