600 கார்கள் தீபாவளி போனஸ்: தாராளம் காட்டும் குஜராத் வைர வியாபாரி

car
Last Modified வியாழன், 25 அக்டோபர் 2018 (11:10 IST)
குஜராத் வைர வியாபாரி ஒருவர் ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி போனஸாக வழங்க இருக்கிறார்.
 
குஜராத் மாநிலம் சூரத்தில் வைர வியாபாரம் செய்து வரும் சாவ்ஜி டோலாகியா வருடா வருடம் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வீடு, கார், பைக் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பரிசாக அளித்து வருகிறார். ஊழியர்களை ஊக்கப்படுத்தவே இந்த செயல்களை செய்துவருவதாக சாவ்ஜி தெரிவித்திருக்கிறார்.
 
இந்நிலையில் வழக்கம்போல் இந்த வருடமும் சாவ்ஜி தன் ஊழியர்களை இன்ப மழையில் நனைய வைத்துள்ளார். வரும் தீபாவளிக்கு 600 ஊழியர்களுக்கு கார்கள் பரிசாக அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :