வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (08:42 IST)

காஃப் சிரப்பில் ஊக்க மருந்து: சர்ச்சையில் சிக்கிய இந்திய இளம் வீரர்!

தடை செய்யப்பட்ட அளவு ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதாக பிரித்வி ஷாவுக்கு 8 மாதம் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது பிசிசிஐ. 
 
கடந்த பிப்ரவரி மாதம் ஷய்த் முஷ்டாக் தொடரில் விளையாட பிரித்வி ஷா சென்றிருந்த போது அவருக்கு இந்தூரில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை அவர் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 
 
இது தொடர்ந்பாக அவர் மீது கடந்த ஜூலை 16 ஆம் தேத் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனை திடர்ந்து பிசிசிஐ பிரித்வி ஷா இந்திய அணிக்காக விளையாக 8 மாதங்கள் தடை விதித்துள்ளது. அதாவது மார்ச் 16 தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை பிரித்வி ஷா எந்த போட்டிகளிலும் விளையாட முடியாத. 
 
மும்பையை சேர்ந்த இளம் வீரர் பிரித்வி ஷாவருங்கால் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என முன்னாள் வீரர்கள் பலர் அவரை பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.