திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (15:43 IST)

ஒருநாள் தொடருக்கும் பேட் கம்மின்ஸ் இல்லையா? ஆஸி அணிக்கு இவர்தான் கேப்டன்!

இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை ஆஸி அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதையடுத்து விரைவில் ஒருநாள் தொடரில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் இடையில் தாயாரின் மரணத்துக்காக இந்தியாவில் இருந்து திரும்பினார் பேட் கம்மின்ஸ். அதனால் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தினார்.

இப்போது ஒருநாள் தொடருக்கும் பேட் கம்மின்ஸ் வருவது சந்தேகம் என்றும், அணியை ஸ்டீவ் ஸ்மித்தான் வழிநடத்த உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. பால் டேம்பரிங் குற்றத்துக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஸ்மித் இப்போது மீண்டும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.