செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:25 IST)

மோர்கனின் தவறால்தான் ஆர் சி பி வெற்றி பெற்றது… கம்பீர் சாடல்!

நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு மோர்கனின் தவறான முடிவுகள்தான் காரணம் என கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர் சிபி அணி கொல்கத்தா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேகேஆர் அணியின் கேப்டன் மோர்கனின் தவறான முடிவுகள்தான் காரணம் என முன்னாள் கொல்கத்தா கேப்டன் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதில் ‘வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை எடுத்தார். அவருக்கு அடுத்தடுத்து ஓவர்கள் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டை சாய்த்திருந்தால் போட்டி அப்போதே முடிந்திருக்கும். பவர்ப்ளேக்குள் மேக்ஸ்வெல்லை அவுட் ஆக்கி இருக்க வேண்டும். மோர்கன் செய்த தவறால்தான் ஆர்சிபி மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்தது’ எனக் கூறியுள்ளார்.