போலிஸ் அஜித்துக்கு ஒரு பிளாஷ் பேக்… அப்போ நீங்க ரேசர்… வலிமை கதை இதுதானா?

Last Modified திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:55 IST)

வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது. படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் வலிமை படத்தின் கதை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது. போலிஸாக இருக்கும் அஜித் தன்னுடைய இளம் வயதில் ரேஸராக இருந்தவர். ஆனால் சிலரின் துரோகத்தால் அதில் இருந்து வெளியேறுகிறார். இப்போது அதுபற்றிய தகவல் கிடைக்கவே அவர்களை பழிவாங்குவதே வலிமை கதையாம்.இதில் மேலும் படிக்கவும் :