பழைய தோனி இல்லை… இன்னும் சீக்கிரமே இறங்கவேண்டும் – கம்பீர் கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்னும் சீக்கிரமே இறங்கி அணியை வழிநடத்த வேண்டும் என கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு மோசமான தோல்வியை தழுவியது. அதனால் இந்த ஆண்டு அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே, அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. கேப்டன் தோனி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தோனி நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த இளமையான வீரர் இல்லை. அவர் இன்னும் முன்னால் களமிறங்கிய அணியை வழிநடத்த வேண்டும். 7-வது வீரராக களமிறங்கினால் அதனை செய்யமுடியாது. நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் அவர் இறங்கினால் அவரை ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார்.