கொரோனா தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்புக்கும் சம்மந்தம் இல்லை!

Last Modified வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:28 IST)

நடிகர் விவேக் இன்று மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக்குக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை
வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார் என சொல்லப்படுகிறது.சில தினங்களுக்கு முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனால் தடுப்பூசியையும் மாரடைப்பையையும் இணைத்து செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியாக ஆரம்பித்தன. ஆனால் தடுப்பூசிக்கும் இப்போதைய அவரது மாரடைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :