1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஜூன் 2023 (08:03 IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டம் கோவை vs திருப்பூர்

TNPL
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது பொதுவாவே டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரும் நடைபெறும் என்பதும் இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியவது கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை 6 சீசன்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் 7வது சீசன் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை, சேலம், திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில் இந்த போட்டியில் நடத்தப்பட உள்ளது என்பதும் சென்னை சேப்பாக்கம் மைதானம் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மைதானத்தில் இம்முறை எந்த ஆட்டமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இம்இ தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஜூலை 12ஆம் தேதி வரை நடைபெறும் என்பதும் இன்றைய முதல் போட்டியில் கோவை மற்றும் திருப்பூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 8 அணிகள் களம் காணுகின்றன. 
 
Edited by Siva