செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (08:02 IST)

ரஃபேல் நடாலை வீழ்த்தி இறுதிச் சுற்றில் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ரஃபேல் நடாலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச். 

 
பிரெஞ்ச் ஓபனில் 14-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் நடாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் நடாலை வீழ்த்தும் முனைப்பில் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர்.   அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார். 
 
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்தது. நாளை நடைபெறும் பிரமாண்ட இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.