இரண்டே நாளில் முடிந்தது நான்கு நாள் டெஸ்ட் போட்டி
டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதால் ஐந்து நாள் போட்டியை நான்கு நாட்களாக மாற்றி, அதையும் பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டது. இந்த முதல் நான்கு நாள் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையே போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி முதல் இன்னிங்ஸில் 30.1 ஓவர்களில் வெறும் 68 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் ஃபாலோ ஆன் ஆன ஜிம்பாவே அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜிம்பாவே பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 42.3 ஓவர்களில் 121 ரன்களுக்கு மீண்டும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ஒரு மோசமான தோல்வியை ஜிம்பாவே பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.