வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:38 IST)

ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்த பெண்… மகனுடன் தனியாக இருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 47 வயது பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் மகள்களை தனது உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை செங்கமலம் தன்  வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இதைப்பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலிஸாருக்கு தகவல் சொல்லவே அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் செங்கமலம் தனியாக இருப்பதைப் பார்த்த மர்ம நபர்கள் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கலாம் என்றும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் எனப் போலீஸ் தெரிவித்துள்ளனர்.