வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (21:37 IST)

ரூ. 80 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய பிரபல வீரர் ...

கால்பந்துவிளையாட்டில் பலவிருதுகளை வென்றவர், சிறந்த கால்பந்து வீரர், பலகோடி ரசிகர்களை கொண்டவர் என எண்ணற்ற புகழுக்குச் சொந்தக்காரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ ஆவார்.
மைதானத்தில் களத்தில் இறங்கி விளையாடும் போது இவரது கால்கள் கால்பந்துக்குப் போட்டியாக வேகத்தில் சுழன்று எதிரிகளை திணறடிக்கச் செய்யும். அந்த அளவு லாவகமான விளையாண்டு பந்தைக் கடத்திக்கொண்டுபோய் கோல்போடுவார்.
 
தற்போது ஜெனிவாவில் மோட்டார் ஷோ 2019 காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உலகில் விலைஉயர்ந்த காரை  புகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் ’ வாய்ச்சூர் நோய்ரி ( la vaiture noire) என்றும் the black car என்று அதற்குக் கீழே சின்னம் போன்று பொறித்துள்ளது.
 
இந்த கார்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கார் மணிக்கு 260 மைல்வேகத்தில் செல்லும் என்றும், மணிக்கு 418 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், இதனுடைய விலை 86 கோடி ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.
கால்பந்து ஜாம்பாவானான ரொனால்டோ இந்த காரை வாங்கியுள்ளதாகத் தகவல் உலகெங்கும் வைரலாகிவருகிறது. அதனால் ரொனால்டோவின் ரசிகர்கள் இதைக் கொண்டாடிவருகிறார்கள்.