வியாழன், 14 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (08:27 IST)

ஐ.எஸ்.ஐ. கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி என்று கூறப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடைபெற்று வந்தாலும் இடையில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி குறுக்கிட்டதால் ஒருசிறிய இடைவெளி ஏற்பட்டது. அதன்பின் மீண்டும் தொடங்கிய நிலையில் நேற்று இறுதிபோட்டி நடைபெற்றது இந்த போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக விளையாடி கோவை அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது
 
பெங்களூர், கோவா ஆகிய இரு அணிகளும் இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால் இரு அணிகளும் சாம்பியன் பட்டம் பெற தீவிரமாக விளையாடியது. இரு அணி வீரர்களும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டத்தின் 90 நிமிடங்கள் வரை எந்த அணியும் கோல் போடவில்லை இந்த நிலையில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட 30 நிமிடங்களில் பெங்களூர் அணி வீரர் ராகுல் பெகே ஒரு கோல் அடித்து தனது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 
 
கோவா வீர்ர்கள் தீவிர முயற்சி செய்தும் இந்த கோலுக்கு மறுகோல் போடமுடியவில்லை. இதனால் பெங்களூரு அணி 1-0 என்ற கோல்கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணிக்கு ரூ.8 கோடி பரிசு வழங்கப்பட்டது. கோவா அணிக்கு ரூ.4 கோடி பரிசு வழங்கப்பட்டது.