ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல நடிகர் கைது
சல்மான் கானின் தம்பியும், பாலிவுட் நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐபிஎல் சூதாட்டத்தை தடுக்க சமீபத்தில் மும்பை போலீசார் சூதாட்ட கும்பலின் தலைவன் சோனு ஜலான் என்பவனை கைது செய்தனர்.
அவனிடம் கைப்பற்றிய டைரியில், ஐபிஎல் சூதாட்டத்தில் பல பிரபலங்கள் ஈடுபட்டது தெரியவந்ததாகவும், அவர்களில் ஒருவர் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அர்பாஸ்கான் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மும்பை போலீசார் நடிகர் அர்பாஸ்கானை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். போலீஸாரிடம் இன்று நேரில் ஆஜரான அர்பாஸ்கான், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். சூதாட்டத்தில் 2.75 கோடி ரூபாயை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட உள்ளார்.
போலீஸார் கைப்பற்றிய டைரியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பலரது பெயரும் இடம்பெற்றுள்ளதாக, வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.