வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (14:33 IST)

ஐபிஎல் போராட்டத்தின்போது காவலரை தாக்கிய நபர் கைது

காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தபோது சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஒருசில அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது சிஎஸ்கே பனியன் போட்டு வந்த இளைஞர்களையும் ஒருசில காவலர்களையும் தாக்கியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது
 
இந்த நிலையில் சீருடைய் அணிந்த காவலர் ஒருவரை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் குத்துச்சண்டை வீரர் போல் தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை பார்த்து ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் சேப்பாக்கத்தில் ஐபிஎல் போராட்டத்தின்போது காவலரை தாக்கிய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயர் மதன்குமார் என்றும், திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்ட மதன்குமார் எண்ணூரை சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவலர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் காவலரை தாக்கிய மதன்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.