1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (14:00 IST)

உலகின் சிறந்த பவுலர்கள் இருந்தும் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா!

இந்தியா - இலங்கை இடையே நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி நாள் போட்டியில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது.

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது. இலங்கையில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது டெஸ்ட் போட்டி ஓயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தது. முதல் டெஸ்ட் போட்டியிலே இந்திய அணி தடுமாறியது. அதன்பின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது.
 
நேற்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது. பந்துவீச்சில் கோட்டை விட்டாலும் பேட்டிங்கில் கலக்கியது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறியது. 4வது ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணி, இறுதி நாளான 5வது நாளில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியது.
 
இதனால் இந்திய அணி வெற்றிப்பெற வேண்டிய போட்டி டிராவில் முடிந்தது. உலகின் சிறந்த இரண்டு பவுலர்கள் பந்துவீசியும் விக்கெட்ட எடுக்க முடியவில்லை. இலங்கை அணியை கேலி செய்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். கடைசி டெஸ்டின் கடைசில் நாள் போட்டியில் இலங்கை அணியின் பேட்டிங் இந்திய அணியை திணறடித்தது.