1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2024 (08:03 IST)

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

யூரோ கால்பந்து போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் ஜெர்மனி மிக அபாரமாக விளையாடி 5-1 என்ற போல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஜெர்மனியில் நேற்று தொடங்கிய ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ஜெர்மனி முதல் கோல் அடித்து சாதனை செய்தது. இதன் பின்னர் 19-வது நிமிடம், 45 வது நிமிடம் என அடுத்தடுத்த மூன்று கோல் போட்டு முதல் பாதி முடிவில் 3-0 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலை வகித்தது.

இதனை அடுத்து இரண்டாவது பாதியிலும் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்திய நிலையில் அடுத்தடுத்து இரண்டு கோல் போட்ட நிலையில்   87வது நிமிடத்தில் தான் ஸ்காட்லாந்து அணி ஒரே ஒரு கோல் போட்டது. இதனை அடுத்து 5-1  என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு யூரோ தொடரில் இத்தாலி 3-0  என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முதல் போட்டியின் சாதனையாக இருந்த நிலையில் ஜெர்மனி அந்த சாதனையை முறியடித்துள்ளது.

Edited by Siva