பாய்ந்து வந்த வேகத்தில் மயங்கி விழுந்த எரிக்சன்! – உலக ரசிகர்களை உறைய வைத்த காட்சி!

Ericson
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 13 ஜூன் 2021 (13:52 IST)
ஈரோ உலக்கோப்பை கால்பந்து போட்டியில் டென்மார்க் வீரர் எரிக்சன் கோல் அடிக்க இருந்த நிலையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய மேட்ச்டேவில் டென்மார்க் – பின்லாந்து அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் பரபரப்பாக நடந்து வந்தது.

அப்போது தன்னிடம் வந்த பந்தை கோல் பக்கம் திருப்ப டென்மார்க் வீரர் எரிக்சன் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவருக்கு மைதானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பின்லாந்து வீரர் பொஜன்பாலோ அடித்த கோலுடன் பின்லாந்து 1-0 என வெற்றி பெற்றது. இந்நிலையில் மயங்கி விழுந்த எரிக்சனுக்கு தனது கோலை சமர்பிப்பதாக பொஜன்பாலோ தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :