செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : திங்கள், 19 ஜூலை 2021 (11:30 IST)

இரண்டாவது டி 20 போட்டியை எளிதாக வென்ற இங்கிலாந்து!

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளை முடித்துக்கொண்டு இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகியோரின் அதிரடியால் 19.5 ஓவர்களில் 200 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் இப்போது சமன் செய்யப்பட்டுள்ளது.