திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (17:21 IST)

கெயில் பகிர்ந்த புகைப்படம் – கொந்தளித்த விஜய் மல்லையா !

தொழிலதிபர் விஜய் மல்லையாவுடன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் கேலிகளையும் மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சட்டரீதியாக எடுத்த முயற்சியின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என  கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய தொடர்ங்து முயற்சி செய்து வருகிறார்.

லண்டனில் உள்ள அவர் அவ்வபோது பொதுவெளிகளில் தலைகாட்டி வருகிறார். சமீபத்தில் இந்தியா விளையாடிய உலகக்கோப்பை போட்டியைக் காணவந்த அவரை இந்திய ரசிகர்கள் திருடன் எனக் கோஷம் எழுப்பினர். இதையடுத்து தற்போது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கெயில் விஜய் மல்லையாவுடன் எடுத்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதற்குக் கீழ் இந்தியர்கள் திருடன் எனக் கேலி செய்ய விஜய் மல்லையா கடுப்பாகி பதிலளித்துள்ளார்.

அதில் ‘கெயிலுடன் எனது படத்தை பார்த்துவிட்டு கருத்துகளை தெரிவிப்பவர்களின் கவனத்திற்கு, நான் திருடனா இல்லையா என்பது பற்றிய உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். 100 விழுக்காடு முழுத் தொகையையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். அதை ஏன் உங்களது வங்கிகள் ஏற்க மறுக்கின்றன என்று அவர்களிடம் கேளுங்கள்’ எனப் பதிலளித்துள்ளார்.