வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (17:59 IST)

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் ; டாக்டர்கள் தீவிர சிகிச்சை!

Queen Elizabeth II
இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இங்கிலாந்து ராணி எலிசபெத் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இங்கிலாந்து ராணி எலிசபெத் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள செய்தி இங்கிலாந்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்னும் ஒரு சில நாட்களில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்துள்ள லிஸ் ட்ரஸ் அவர்கள் பதவி ஏற்க இருக்கும் நிலையில் திடீரென இங்கிலாந்து ராணியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது