செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (18:23 IST)

சென்னையில் பயிற்சியை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள்!

சென்னையில் முகாமிட்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

அதன்படி சென்னைக்கு முன்பே வந்த பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்கியுள்ளனர். பின்னர் வந்த வீர்ரகள் எல்லாம் பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு பின்னர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.