செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (17:26 IST)

சென்னை 28க்கு முன்னர் வெங்கட் பிரபு எழுதிய கதை… நேரடி ஒளிபரப்பு ரிலீஸ் அப்டேட்!

இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு உருவாக்கியுள்ள வெப் சீரிஸான லைவ் டெலிகாஸ்ட் பிப்ரவரி 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலிஸாக உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலாக உருவாக்கியுள்ள வெப் சீரிஸாக லைவ் டெலிகாஸ்ட் (நேரடி ஒளிபரப்பு) வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் காஜல் அகர்வால், வைபவ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இதைப் பற்றி கூறியுள்ள வெங்கட் பிரபு நான் சினிமாவுக்கு வந்த புதிதில் முதல் முதலாக எழுதிய திரைக்கதை லைவ் டெலிகாஸ்ட்தான். அப்போது என்னால் அதை ரசிகர்களின் பார்வைக்குக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் இப்போது வெப் சீரிஸாக உருவாகி உங்கள் பார்வைக்கு வர உள்ளது எனக் கூறியுள்ளார். வெங்கட் பிரபு சென்னை 28 படத்தை இயக்குவதற்கு முன்னதாக நேரடி ஒளிபரப்பு என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கைவிடப்பட்டது.