கொரோனா பரவல் வலையத்திற்குள் வந்த 8 மாநிலங்கள்...!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 4 மார்ச் 2021 (08:07 IST)
தமிழகம் உள்பட எட்டு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தகவல். 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
 
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாவும், இந்தியாவில் தற்போது பரவி வருகிறது என்பது கூடுதல் பயத்தை கொடுத்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :