வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (10:56 IST)

52 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து.. இன்னிங்ஸ் வெற்றி கன்பர்ம்?

India Match
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 52 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்துவிட்டது. எனவே இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 218 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது 
 
இதனை அடுத்து இந்திய அணி முதலில் இன்னிங்ஸில் 477 ரன்கள் எடுத்தது என்பதும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அபாரமாக சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே ஆரம்பத்திலே அவுட் ஆகினர். 
 
இந்த நிலையில் தற்போது மூன்று விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து 52 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது. இங்கிலாந்து அணி தற்போது 207 ரன்கள் பின்தங்கி இருப்பதை அடுத்து இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 
 
Edited by Mahendran