ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (17:20 IST)

கங்குலியின் 'பயோபிக்' படம்: மீண்டும் மகள் இயக்கத்தில் ரஜினி ?

rajinikanth
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் என்ற படத்தில்  ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறர். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
 
சமீபத்தில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இக்கத்தில்  ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த  நிலையில், அவரது இளைய மகள் செளந்தர்யா , இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைய வரலாற்று படத்தை இயக்க உள்ளார் எனவும், இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை இந்தி தயாரிப்பாளரும் இயக்குனருமான சஜித் நாடியத்வாலா தயாரிக்கவுள்ளார்  என தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை, சஜித் சென்னையில் சந்தித்துப் பேசியது இப்படம் தொடர்பாகத்தான் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் ஹீரோவாக நடிக்க நடிகர் ஆயுஸ்மான் குர்ரானாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.