2வது இன்னிங்ஸில் வெளுத்து கட்டிய இங்கிலாந்து: அயர்லாந்து திணறல்

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (19:44 IST)
 
சமீபத்தில் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியுடன் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இனிங்ஸில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
 
உலக கோப்பையை வென்ற ஒரு அணி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான லீச் 89 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இன்னும் களத்தில் உள்ளார். அதே போல் மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரான ஜேஜே ராய் அதிரடியாக 72 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து சற்று முன் வரை இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 45 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது 
 
முன்னதாக அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 58.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 208 ரன்கள் எடுத்தது. தற்போது இங்கிலாந்து அணி 60 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :