செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (11:45 IST)

மான்செஸ்டர் விமான நிலையத்தில் அவமானப் படுத்தப்பட்டேன் – வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு !

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் மான்செஸ்டர் விமானநிலையத்தில் அதிகாரிகள் அவரை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் நீரிழிவு நோயாளி என்பதால் அவர் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்தே இன்சுலின் ஊசிகளைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் தன்னோடு எப்போதும் இன்சுலின் ஊசிகளை கையில் வைத்திருப்பார். இந்நிலையில் அவர் மான்செஸ்டர் விமானநிலையத்தில் இது சம்மந்தமாக அவமானப்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

’மான்செஸ்ட்ர் விமான நிலைய அதிகாரிகள் என்னுடைய இன்சுலின் பெட்டியை எடுத்து பிளாஸ்டிக் கவரில் வைக்க சொல்லி இழிவாகப் பேசினர்’ என அவரது டிவிட்டில் புகார் அளிக்க,உடனடியாக பதிலளித்த மான்செஸ்டர் விமான நிலைய நிர்வாகம் ’ எங்கள் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு நன்றி. எங்களுக்கு நேரடியாக இந்த புகாரை அனுப்ப முடியுமா? ஆகவே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்’ எனக் கூறியுள்ளது.

அதற்கு வாசிம் அக்ரம் ‘உங்களது உடனடி பதிலுக்கு மிக்க நன்றி. உங்களுடன் விரைவில் தொடர்பு கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.