சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சத் சாதனை !

Last Modified வியாழன், 11 ஜூலை 2019 (11:00 IST)
இத்தாலியில் நடைபெற்ற கோடைக்கால பல்கலைக்கழகப் போட்டிகளில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரில் 30ஆவது கோடைக்கால பல்கலைக்கழகப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட டூட்டி சந்த் 100 மீட்டரை 11.24 விநாடியில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம் அவரது முந்தைய சாதனையான 11.32 விநாடி என்ற சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

டூட்டி சந்த் தன்னை ஓர் பால் உறவினராக அறிவித்துக்கொண்டதால் கடுமையான விமர்சனங்களி எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :