திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (16:07 IST)

கோலி கூறியது சரிதான் இருந்தாலும்..... - சவாலை விரும்பும் தோனி

வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு பயிற்சி எடுக்க போதுமான கால அவகாசம் இல்லை என கோலி கூறியது சரிதான் இருந்தாலும் அது ஒரு கிரிக்கெட் வீரருக்கு சவால்தான் என தோனி கூறியுள்ளார்.


 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 
 
இதுபற்றி விராட் கோலி, இலங்கை தொடர் முடிந்ததும் தென்னாப்பரிக்கா செல்ல வேண்டும். வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது அங்கு உள்ள ஆடுகளத்திற்கு ஏற்ப வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் போட்டிகளில் வெற்றிப்பெற முடியும். ஆனால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
 
விராட் கோலியின் இந்த கருத்து குறித்து தோனியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
 
கோலி கூறியது சரிதான். நாங்கள் அதிகமான போட்டிகள் விளையாடுகிறோம். வெளிநாடுகளில் பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க போதுமான பயிற்சி கிடைக்கவில்லை. இருந்தாலும் இது ஒரு கிரிக்கெட் வீரருக்கு சவால்தான் என்றார்.