வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மே 2017 (12:25 IST)

பயிற்சி ஆட்டத்திலும், சலிக்காமல் கெத்து காட்டிய தோனி!!

நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  


 
 
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
 
இந்திய அணி பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.  
 
இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கிராண்ட்ஹோமே, இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்தார் ஆனால் பந்தை அவர் தவறவிட்டார். 


 

 
இதை பிடித்த தோனி, கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டெம்பிங் செய்தார். பயிற்சி போட்டியாக இருந்தாலும், சிறப்பாக செயல்பட்ட தோனியின் வேகத்தை சக வீரர்கள் பாராட்டினர். தவிர, தோனியின் ரசிகர்களும் அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.