சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 16 மே 2020 (19:08 IST)

தல தோனி கோபப்படுவதை பார்த்திருக்கிறேன் - முன்னாள் வீரர் ’ஓபன் டாக் ‘

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்டவருமான தோனி, தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே 'கூல் கேப்டன்' என அழைப்பட்டார்.

சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடங்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். ஆனால் அவ்வப்போது, நட்சத்திரங்கள் வெளியிடும் புகைப்படம் , வீடியோ ரசிகர்களுக்கு ஆதரவாக உள்ளது.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர், தோனி கோபப் படுவதை இருமுறை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

முன்னாள் கேப்டன் தோனி பொதுவாக கோபப்பட மாட்டார் என்று சொல்வார்கள். ஆனால், கடந்த 2007 முதல் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் சில நேரங்களில் நாங்கள் சிறப்பாக ஆடாத நேரங்களில் அவர் கோபப்பட்டுள்ளார்.

அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் மீது பீல்டிங் சரி செய்யாத காரணத்துக்க கோப்பட்டுள்ளார்.   ஆனாலும் உலகில் உள்ள தலை சிறந்த கேப்டன்களில் ஒப்பிட்டுப்பார்த்தால் அவர் நிதானமானவர், அமைதியானவர் என்று தெரிவித்துள்ளார்.