செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:00 IST)

ஐபிஎல் மூலமாக மட்டும் இத்தனை கோடி வருமானமா? தோனியின் தனித்துவ சாதனை!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலமாக மட்டும் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சென்னை அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. சென்னை அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது அவர் பூனே அணிக்காக விளையாடினார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலமாக மட்டும் தோனி இதுவரை 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 146 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.