மஞ்சள் நிறமாக வீட்டை மாற்றிய தமிழக ரசிகருக்கு தோனி பாராட்டு!

மஞ்சள் நிறமாக வீட்டை மாற்றிய தமிழக ரசிகருக்கு தோனி பாராட்டு!
siva| Last Updated: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (07:47 IST)
மஞ்சள் நிறமாக வீட்டை மாற்றிய தமிழக ரசிகருக்கு தோனி பாராட்டு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது வீட்டையே மஞ்சள் நிறமாக மாற்றினார் என்பதும் தோனியின் புகைப்படம் உள்பட பல புகைப்படங்களை தனது வீட்டின் சுவரில் வரைந்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தன்னுடைய வீட்டையே மஞ்சள் நிறமாக மாற்றிய தமிழக ரசிகர்களுக்கு தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றுவது என்பது சாதாரணமான காரியமல்ல. அதுமட்டுமின்றி அந்த வீட்டின் முன் நின்று அவர் குடும்பத்தினரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்

டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு பின்னர் மாற்றுவது போல் வீட்டினை செய்ய முடியாது என்றும் தோனி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக கடலூர் மாவட்டம் அரங்கூரில் வசிக்கும் கோபி கிருஷ்ணன் என்ற தோனியின் தீவிர ரசிகர் தான் தனது வீட்டின் சுவர்களுக்கு மஞ்சள் வர்ணம் தீட்டி தோனியின் புகைப்படங்களையும் சுவர்களில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :