திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (19:52 IST)

தோனி ஒரு ‘GOAT’: சானியா மிர்சா கணவர் கமெண்ட்!!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஒரு ‘GOAT’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், டென்னிஸ் வீராங்கணை சான்யா மிர்சாவின் கணவருமான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.


 
 
தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவரை பற்றி சோயிப் மாலிக் பேசியுள்ளார்.
 
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி உலக லெவன் அணி தற்போது பாகிஸ்தான் மண்ணில் விளையாடுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் இடம்பிடித்துள்ளார்.
 
சமீபத்தில், சோயிப் மாலிக் இணைய தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது தோனி குறித்து ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று ஒருவர் கேள்வி கேட்டார்.
 
இதற்கு தோனி ஒரு ‘GOAT’ என்று கூறினார் சோயிப். Greatest Of All Time என்பதன் சுருக்கம் தான் GOAT. இதன் மூலம் எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கும் தோனியின் மீது தனி மரியாதை இருப்பது வெளிப்பட்டுள்ளது என வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.