செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (11:39 IST)

அம்பயர்கள் நிம்மதியாக தூங்கலாம்… கோலி குறித்து டிவில்லியர்ஸ்!

ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் கேப்டன்சியை துறந்துள்ளார்.

இந்த சீசனோடு ஆர்சிபி அணி கேப்டன் பதவியை துறக்க உள்ளதாக கோலி அறிவித்திருந்தார். அதனால் இந்த முறை கோப்பையோடு அவரை வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் நேற்று கொல்கத்தா அணியுடனான ப்ளே ஆப் போட்டியில் தோற்று ஆர்சிபி வெளியேறியது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக தனது கடைசி போட்டி விளையாடிய பின்னர் கோலி பேசியபோது ‘ இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் விளையாடும் ஒரு சூழலை நான் உருவாக்கியுள்ளேன். இந்திய அணியிலும் நான் அதை செய்தேன். ஒவ்வொரு வருடமும் ஆர்சிபி அணியை தலைமையேற்று என்னுடைய 120 சத உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இனிமேல் அதை ஒரு வீரனாக செய்வேன். வேறு எந்த அணிக்காகவும் விளையாட மாட்டேன். ஐபிஎல்  விளையாடும் வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன். ’ எனக் கூறியுள்ளார்.

கோலியின் முடிவு குறித்து பேசியுள்ள சக அணி வீரரும், நெருங்கிய நண்பருமான டிவில்லியர்ஸ் ‘சிறப்பாக ஆர்சிபி அணியை வழிநடத்தியவர் கோலி. சிறந்த வீரராகவும், மனிதனாகவும் உருவெடுக்க கோலி உதவினார். வீரர்களிடம் தன்னம்பிக்கையை விதைத்துள்ளார். இது கோப்பையை விடப் பெரியது. சில அம்பயர்கள் நிம்மதியாக தூங்கலாம். இனிமையான நினைவுகளை தந்ததற்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.