செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 9 அக்டோபர் 2021 (10:37 IST)

அக்ஸர் படேல் செய்த தவறால் தோல்வியைத் தழுவிய டெல்லி அணி!

நேற்று நடந்த பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி பந்தில் பரத் அடித்த சிக்ஸால் வெற்றியைப் பெற்றது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய பெங்களூர் அணி முதலில் சறுக்கினாலும், பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் பரத் ஆகியோரின் அதிரடியால் கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது பரத் பந்தை அடிக்க அது அக்ஸர் படேல் வசம் சென்றது. அதனால் ஒரு ரன் மட்டுமே எடுக்கும் வாய்ப்பு உன்டானது. ஆனால் அந்த பந்தை அக்ஸர் படேல் அலட்சியமாக எடுக்க முயன்றதால் மிஸ் பீல்ட் ஆகி இரண்டு ரன்கள் எடுத்தனர். இதையடுத்து கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து பரத் வெற்றிக்கனியை ருசித்தார். இதனால் அக்ஸர் படேல் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.