வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Updated : வெள்ளி, 8 அக்டோபர் 2021 (23:54 IST)

ஐபிஎல்-2021; மும்பை இந்தியன்ஸ் அணி ஆறுதல் வெற்றி!

ஐபிஎல் 14 வது சீசனில்  இன்றைய போட்டியில் மும்பை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.
மும்பை அணி இன்றைய போட்டியில் மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மும்பை அணி அதிரடியாக ரன் சேர்த்தது.

 இதில், 4.2 ஓவர்களில் 67 ரன்கள் குவித்தனர். மேலும் தொடர்க்க வீரர் இஷான் கிஷான் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ்  அணி 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் எடுத்து 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,

இதையடுத்து பேட்டி செய்த ஐதராபத் அணி பேட்டிங்கில் ஓரளவுக்கு ஈடுகொடுத்து விளையாடினாலும்  மும்பை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இருப்பினும் ஆறுதல் வெற்றியுடன் லீக் சுற்றுடன் மும்பை அணி  வெளியேறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது.