1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 மே 2024 (06:43 IST)

டெல்லி அணி வெற்றி.. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி இழந்த 4 அணிகள்..!

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து லக்னோ அணியுடன் சேர்ந்து மொத்தம் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததாக கருதப்படுகிறது

நேற்றைய போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து நான்கு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது என்பதும் அபிஷேக் போரல் அபாரமாக விளையாடி 58 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடிய நிலையில் நிக்கோலஸ் பூரன் அபாரமாக விளையாடினாலும் அந்த அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்ததால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த வெற்றியால் டெல்லி அணி 14 புள்ளிகள் எடுத்து உள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. லக்னோ அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளதால்,  மிக மோசமான ரன் ரேட் இருப்பதால் அடுத்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினம் என்பதால் அந்த அணி கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்று சொல்லலாம். எனவே குஜராத், பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளுடன் லக்னோ அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது.

தற்போதைய நிலையில் முதல் நான்கு இடங்களில் கொல்கத்தா, ராஜஸ்தான், சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva