புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (07:37 IST)

புரோ கபடி 2018: டெல்லி, குஜராத் அணிகள் அபார வெற்றி

புரோ கபடி போட்டிகளில் லீக் போட்டிகள் ஒன்பதாவது வாரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் குஜராத் அணி பாட்னா அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத், எந்த ஒரு கட்டத்திலும் பாட்னா அணியை அதிக புள்ளிகள் எடுக்கவிடவில்லை. இறுதியில் 45-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி, பாட்னாவை தோற்கடித்தது.

இதேபோல் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டெல்லி அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 34-29 என்ற புள்ளிக்கணக்கில்  வீழ்த்தியது.

நேற்றைய போட்டிகள் முடிவடைந்த பின்னர் ஏ பிரிவில் மும்பை 72 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குஜராத் 63 புள்ளிகளுடன் 2வது இடத்த்லும், புனே 47 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. அதேபோல் பி பிரிவில் பெங்களூரு, பாட்னா, பெங்கால் ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது