திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:07 IST)

காற்று மாசு வழக்கு –டெல்லி அரசுக்கு 25 கோடி அபராதம்

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் டெல்லி அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் வித்தித்துள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் காற்று மற்றும் ஒலி மாசு அதிகமாகி வருகிறது. காற்று மாசுவைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

இதை முன்னிட்டு வாகனங்களை ஓட்டுதல் தொடர்பான பல விதிமுறைகள் டெல்லியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காற்று மாசு தொடர்பான வழக்கு  ஒன்று தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் டெல்லி அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக கூறி 25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராதத்தைக் கட்ட தவரும் பட்சத்தில் மாதாமாதம் 10 கோடி அபராதம் கட்ட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.