திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 மே 2018 (21:55 IST)

மும்பைக்கு 168 இலக்கு கொடுத்த பெங்களூர்

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வரும் நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் பெங்களூர்  அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
பெங்களூர் அணியின் தொடக்க வீரர் வோரா 45 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுக்க, மெக்கல்லம், கோஹ்லி மற்றும் கிராண்ட் ஹோம் ஆகியோர்களின் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. 
 
மும்பை அணியின் பாண்டியா 3 விக்கெட்டுக்களையும், மார்கண்டே, பும்ரா மற்றும் மெக்லெனகன்  தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
இதனால் வெற்றி பெற 168 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் மும்பை களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.