புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:00 IST)

பாகிஸ்தானில் இந்து கோயில்கள் இடிப்பு… தனிஷ் கனேரியா கண்டனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தனிஷ் கனேரியா இந்து கோயில்கள் இடிக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தனிஷ் கனேரியா மதம் காரணமாக தான் அவமதிக்கப்பட்டதாக முன்பு குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இப்போது கராச்சி அருகே உள்ள ராஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்துகோயில்கள் தாக்கப்பட்டது குறித்து கண்டன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘பாகிஸ்தானில் இந்துவாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் ஒவ்வொரு மதத்தையும் மதிக்கிறேன். பாகிஸ்தான் எனக்கு அதிகமான அன்பை வழங்கியுள்ளது. ஆனால் கோயில்கள் தாக்கப்படுவதை கண்டு நான் திகைக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் பாகிஸ்தானின் நன்மதிப்பைக் குலைத்துவிடும் என்பதால் நான் இந்த விஷயத்தில் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய வேண்டும் என விரும்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.