1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 17 மே 2023 (18:03 IST)

இனிமேல் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்: சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பிளே ஆப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பதும் இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது என்பது. டிக்கெட்டுகளை ஏற்கனவே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி அதிக விலைக்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருந்தது 
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் இரண்டு பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran