1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 மே 2023 (07:49 IST)

இன்று முதல் வாட்ஸ் அப் மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்: அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய சில சமயம் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வாட்சப் செயலியில் சென்னை மெட்ரோவின் வாட்ஸ்அப் எண்ணை பதிவு செய்து ஹாய் என்ற மெசேஜ் அனுப்பினால் போதும். அதன் பிறகு எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற விவரத்தையும் அதன் பிறகு ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தினால் உடனடியாக ஆன்லைன் டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும்
 
இந்த ஆன்லைன் டிக்கெட்டை ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று முதல் அறிமுகம் செய்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva