செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:59 IST)

மீண்டும் கொரோனா சோதனை – சி எஸ் கே அணிக்கு சாதகமான முடிவுகள்!

இரண்டு வீரர்கள் உள்பட சி எஸ் கே அணியைச் சேர்ந்த 13 பேருக்குக் கொரோனா இருப்பதாக  தகவல்கள் வெளியான நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் அணியில் உள்ள தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் என்ற இருவராவர். 

இதனால் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளாமல் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இப்போது நடந்த அடுத்த கட்ட சோதனையில் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இதனால் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் பயிற்சியில் சி எஸ் கே அணியினர் கலந்துகொள்வார்கள் என சொல்லப்படுகிறது.